ஒரு கோடி ரூபாய் சேவை வரிசெலுத்தாத வழக்கில் நடிகர் விஷாலை வருகின்ற 26_ஆம் ஆஜராகும்படியும் இல்லையென்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நடிகர் விஷாலின் வீடு மற்றும் அலுவலகத்தில் கடந்த 2016_ஆம் ஆண்டு சேவைவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இந்த சோதனையில் நடிகர் விஷால் ரூபாய் 1 கோடி வரை வரி செலுத்தாதது கண்டறியப்பட்ட்தாக கூறப்படுகிறது.இது குறித்து நடிகர் விஷால் விளக்கம் அளிக்குமாறு சேவை வரி துறை அதிகாரிகள் 5 முறை சம்மன் அனுப்பியும் நடிகர் விஷால் ஆஜராகி பதிலளிக்காததால் சென்னை எழுப்பூர் அல்லிக்குளத்தில் உள்ள பொருளாதார குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏற்கனவே நடிகர் விஷாலை நேரில் ஆஜராக உத்தரவிட்டதின் பேரில் இன்று நீதிமன்றத்தில் நடிகர் விஷால் ஆஜராகினார்.வழக்கு விசாரணைக்கு சிறிது நேரம் தாமதமாக வந்ததால் நடிகர் விஷாலை காத்திருக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
முக்கால் மணி நேரத்திற்கு பிறகு விசாரணைக்கு நடிகர் விஷாலை மீண்டும் அழைத்த நீதிபதி இதுவரை கட்டிய சேவை வரி தொடர்பான விவரங்கள் குறித்து கேள்வி எழுப்பினார்.அப்போது நடிகர் விஷாலின் வழக்கறிஞ்சர் இதுவரை கட்டிய சேவை வரி தொடர்பான ஆவணக்களை அடுத்தமுறை தாக்கல் செய்யுமாறு கூறினார்.இதை அடுத்து வரும் 26_ஆம் தேதி சேவை வரி குறித்த ஆர்வங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி அன்றைய தேதியில் நடிகர் விஷால் மீண்டும் ஆஜராக வேண்டுமென்று நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.நடிகர் விஷால் 26_ஆம் தேதி ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து நடிகர் விஷால் பத்திரவிக்கையாளரிடம் கூறும் போது ,சேவை வரி குறித்து சம்மன் வந்ததாய் அடுத்து ஏனலுடைய தரப்பில் தரப்பில் என்ன சொல்லணுமோ அதை நான் அதை நீதிபதி முன்பு சொல்லியுள்ளேம்.மீண்டும் வருகின்ற 26ஆம் தேதி நீதிமன்றம் வர சொல்லி உள்ளனர்.அதிலும் எங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க உள்ளோம் என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.
DINASUVADU
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…
துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…