ரூ.100 கோடியில் மாதவரம் பால்பண்ணை விரிவாக்கம்..!

Default Image

மாதவரம் மத்திய பால் பண்ணை, 10 லட்சம் லிட்டர் பாலை கையாளும் வகையில் நவீனமயமாக்கப் பட்ட பால் பண்ணையாக ரூ. 100 கோடி மதிப்பீட்டில், விரிவாக்கம் செய்யப்படும்.

சேலம் பால்பண்ணையின் பால் பதப்படுத்தும் திறன் நாளொன்றுக்கு 5 லட்சம் லிட்டர் என்ற அளவிலிருந்து, 7 லட்சம் லிட்டர் என்ற அளவிற்கு அதிகரிக்கப்படும். மேலும், நாளொன்றுக்கு 30 மெட்ரிக் டன் டெய்ரி ஒயிட்னர் தயாரிக்கும் புதிய தொழிற்சாலை ரூ.100 கோடியில் நிறுவப்படும். வேலூர்-திருவண்ணாமலை மாவட்ட ஒன்றிய பால்பண்ணை நாளொன்றுக்கு 1.5 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தும் திறன் கொண்டது. இதை நாளொன்றுக்கு 5 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தும் திறன் கொண்ட புதிய பால் பண்ணையாக ரூ. 75 கோடி செலவில் தொழிற் நுட்ப கலை நயத்துடனும், கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகள், தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம், பால் பதப்படுத்தும் உபகரணங்களுடன் புதிய இடத்தில் உருவாக்கப்படும்.

தஞ்சாவூர் ஒன்றியத்தில் ஒரு லட்சம்லிட்டர் பால் பதப்படுத்தும் திறன் கொண்ட, பால் பொருட்கள் தயாரிக்கும் வசதிகளுடன் கூடிய தானியங்கி பால் பண்ணையாக ரூ. 75 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். திருச்சி ஒன்றியத்தில் நாளொன்றுக்கு 5,000 லிட்டர் ஐஸ்கிரீம் தயாரிக்கும் திறன் கொண்ட தொழிற்சாலை ரூ. 10 கோடியில் உருவாக்கப்படும். இந்த ஐஸ்கிரீம் தயாரிக்கும் தொழிற்சாலை, அதிநவீன வசதிகளுடன் கூடிய தானியங்கி ஐஸ்கிரீம் கலவை தயாரிக்கும் கருவி, கெட்டியாக்கும் அரை தானியங்கி சிப்பங்கட்டும் இயந்திரம், குளிரூட்டும் அமைப்பு மற்றும் குளிர்பதன சேமிப்பு அறைகள் கொண்டதாக அமையும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்