ரூ.10 கோடி சைபர்கிரைம் பிரிவை பலப்படுத்த ஒதுக்கீடு !தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்
தமிழக அரசு,சைபர்கிரைம் பிரிவை பலப்படுத்த 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நீதிபதி கிருபாகரன் ஜாக்டோ – ஜியோ போராட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தெரிவித்த கருத்துக்களை விமர்சித்து சமூகவலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட்டது தொடர்பான வழக்கு நீதிபதிஎன்.கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் நர்மதாசம்பத், சைபர்கிரைம் பிரிவை பலப்படுத்த 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து அறிக்கை தாக்கல்செய்ய 10 நாட்கள் அவகாசம் வேண்டுமெனவும்தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி கிருபாகரன் சைபர்கிரைம் பிரிவில் உள்ள உள்கட்டமைப்புவசதிகள், நிபுணர்கள் குறித்த அறிக்கையை தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூன் 28ம்தேதிக்கு தள்ளிவைத்தார்.