ரூ 1.5 கோடி ஒரு கிட்னி!ரூ 5 லட்சம் பெண்ணிடம் மோசடி!

Default Image

சென்னை பெண் ஒருவர் ஒரு கிட்னியை தானமாக கொடுத்தால் ஒன்றரை கோடி ரூபாய் தருவதாக வந்த இ மெயிலை நம்பி ஐந்தரை லட்சம் ரூபாய் பணத்தை இழந்த நிலையில், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்

கிட்னி… எப்போதும் மிகவும் பணமதிப்பு மிக்க  மனித உடல் உறுப்பாக பார்க்கப்படுகின்றது…!  கிட்னியை தானமாக கொடுப்பது போல ஆவணங்களை போலியாக தயாரித்து 5 லட்சம் முதல் 20 லட்சம் வரை ஆளுக்கு தகுந்தாற் போல விலை பேசி விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வருகின்றது. இதானால் அரசு மருத்துவமனைகளில் கிட்னியை தானம் கொடுப்பதற்கும் நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒரு கிட்னிக்கு ஒன்றரை கோடி ரூபாய் தருவதாக ஆசைக்காட்டி, வெளி நாட்டில் இருந்து பணத்தை வங்கி கணக்கில் செலுத்த கமிஷன் தொகை என்று பெண் ஒருவரிடம் ஐந்தரை லட்சம் ரூபாய் வரை ஆன்லைன் மூலமாக மோசடி நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 

சென்னை ஜி.கே.எம் காலணியை சேர்ந்த ரஞ்சிதா என்ற பெண்ணின் இ மெயில் முகவரிக்கு வந்த கடிதம் ஒன்றில் கோடீஸ்வரர் ஒருவருக்கு ஒரு கிட்னி அவசரமாக தேவைப்படுகின்றது. அதனை தானமாக தர சம்மதிப்பவர்கள்து வங்கி கணக்கிற்கு உடனடியாக ஒன்றரை கோடி ரூபாய் டெபாசிட் செய்ய தயாராக இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை நம்பி ரஞ்சிதா, தனது குடும்பத்தின் கடனை அடைக்கவும், பணத்தேவையை பூர்த்தி செய்ய வேண்டியும், குடும்பத்தினருக்கு தெரியாமல் தனது கிட்னியை தானமாக கொடுக்க முடிவு செய்துள்ளார். கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் வாங்கியது போல அவர்கள் ஒரு மருத்துவமனையின் பெயரில் போலியான ஆவணங்களை ரஞ்சிதாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதனை பார்த்து உண்மை என நம்பி உள்ளார் ரஞ்சிதா, வெளி நாட்டில் இருந்து வங்கி கணக்கில் பணத்தை அனுப்ப நிறைய நடைமுறைகள் இருப்பதாக கூறி வங்கி மாற்று கட்டணம். கமிஷன் என கொஞ்சம் கொஞ்சம்மாக பணத்தை கறக்க ஆரம்பித்துள்ளனர். ரஞ்சிதாவும் தனக்கு தான் கிட்னி விற்ற பணம் ஒன்றரை கோடி ரூபாய் வரவிருக்கிறதே என்று தனது நண்பர்கள், உறவினர்களிடம் இருந்து 5 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்று அவர்களது வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார்.

 

ஒரு கட்டத்தில் அவர்கள் பனம் தராமல் ஏமாற்றுவது போல தெரிந்ததால் கிட்னி தானம் கொடுக்க விருப்பமில்லை என்றும் தான் கொடுத்த பணாத்தை திரும்ப ஒப்படையுங்கள் என்று கேட்டு அவர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார் ரஞ்சிதா, ஆனால் அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்க 10 சதவீத கமிஷன் 50 ஆயிரம் ரூபாய் வங்கி கணாக்கில் செலுத்த வேண்டும் என்று நிர்பந்தபடுத்தி உள்ளனர்.

இந்த தகவல் ரஞ்சிதாவின் குடும்பத்திற்கு தெரியவர தான் ஏமாற்றபட்டதை உணர்ந்து தனது கணவரிடம் கண்ணீர் விட்டு கதறி உள்ளார் ரஞ்சிதா, இதையடுத்து இந்த வினோத மோசடி குறித்து சென்னை மா நகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார் ரஞ்சிதா.

ஆன்லைனில் கிட்னிக்கு விலை வைத்த அந்த கும்பல் அமெரிக்க உயர் நீதிமன்ற அனுமதி கடிதம், மருத்துவமனை ஒப்புதல் கடிதம், ரிசர்வ் பேங் ஆப் இந்தியா கடிதம் என அனைத்து போலி ஆவணங்களையும் ஆதாரமாக அனுப்பியே ரஞ்சிதாவிடம் இருந்து பணம் பரித்துள்ளனர். ஆன்லைன் லாட்டரியில் கோடிக்கணக்கில் பணம் விழுந்துள்ளதாக கூறி எப்படி கொஞ்சம் கொஞ்சமாக கமிஷன் பணம் என மோசடியாக பணம் பறிப்பார்களே அதே பாணியில் என்றும் கிட்னியை தானமாக பெறுவதற்கு முன்பாகவே பணம் தருவதாக கூறி கைவரிசை காட்டியுள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர் காவல்துறையினர்.

பொதுமக்கள் இது போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளை நம்பவோ, அதற்காக அந்நியர்களின் வங்கிகணக்கில் பணமோ செலுத்தி ஏமாற வேண்டாம் என்று சென்னை மாநகர காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்