ரூபாய் 96,46,000 வழங்கி ” சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம் ” என்று நிரூபித்து காட்டியது திமுக..!!

Published by
Dinasuvadu desk

அறிவித்தபடி ஒரு மாத ஊதியத்தை கேரளாவுக்கு வழங்கிய திமுக MLA , MP க்கள்

கொச்சி ,

கேரளாவில் சமீபத்தில் பெய்த கனமழை கேரளாவை மிகப்பெரிய பேரழிவை உண்டாக்கியது.இதனால் கேரளா மக்கள் பாதிக்கப்பட்டு பெரிய பாதிப்புக்குள்ளாகி உள்ளாகியுள்ளனர். மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்து நிற்கிறார்கள். இந்நிலையில் கேரளாவுக்கு உலகளவில் மக்கள் , வாலிபர்கள் , மாணவர்கள் , குழந்தைகள் , அரசு ஊழியர்கள் , அரசியல் கட்சிகள் உதவி அறிவித்து செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள மக்கள் , மாணவர்கள் , அரசியல் கட்சியினர் ,அரசு ஊழியர்கள்  மற்றும் பல்வேறு அமைப்பினர் கேரளா மக்களுக்கு பொருளாகவும் , பணமாகவும் உதவி வந்தனர்.

இந்நிலையில் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட  அம்மாநில உட்கட்டமைப்புக்கு ஏற்ப்பட்டுள்ள  பாதிப்புகளை  சரி செய்து கேரள மாநில மக்களின் துயர் துடைப்பு பணிகளுக்கு உதவிடும் வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஏற்கனவே ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது. இது தவிர கேரள மாநில கழக நிர்வாகிகளும், இங்குள்ள கழக தோழர்களும் நிவாரண உதவிகளையும், பொருட்களையும் வழங்கி வந்தார்கள்.

இருந்தும் திமுக தலைவர் ஸ்டாலின் திமுக சார்பில் கேரள ஏற்பட்ட வெள்ள  நிவாரண பணிக்காக  திமுகவின் அனைத்து  சட்டமன்ற ,  பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளம்  வழங்கப்படும் என்று அறிவித்தார்.அதை தொடர்ந்து திமுக சார்பில் இன்று மாலை கேரளாவில் திமுக சார்பில் MP ,MLA க்களின் ஒரு மத ஊதியமாக 96,46,000 ரூபாயை கேரளாவின் அமைச்சர் இ.பி ஜெயராமன் அவர்களிடம் வழங்கினர்.இதில் திமுகவின் மா.சுப்பிரமணியம் MLA தலைமையில் MLA க்கள் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

 

DINASUVADU 

Recent Posts

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை! இன்றைய நிலவரம் என்ன?

சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…

39 seconds ago

இலங்கையில் சாதனை படைத்த NPP.! தனி பெரும்பான்மை நிரூபித்த புதிய அதிபர்.!

கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…

6 mins ago

Live : இலங்கை அதிபர் தேர்தல் முதல்., செந்தில் பாலாஜி மீதான ஊழல் புகார் வரையில்…

சென்னை : நடைபெற்ற இலங்கை  புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர்  அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…

26 mins ago

ரூ.397 கோடி ஊழல்? செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் பரபரப்பு புகார்!

சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…

1 hour ago

நியூஸிலாந்து பார்லிமென்ட்டில் நடனம் ஆடி எதிர்ப்பைத் தெரிவித்த பெண் எம்.பி! வைரலாகும் வீடியோ!

வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…

2 hours ago

மெட்டா நிறுவனத்துக்கு ரூ.7ஆயிரம் கோடி அபராதம்! ஐரோப்பிய ஆணையம் அதிரடி!

வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…

3 hours ago