ரீசார்ஜ் செய்யவில்லையென்றால் ரத்து செய்யப்படும் எண்களின் சேவை…!வாடிக்கையாளர்களை மிரட்டிய தொலைத்தொடர்பு துறைக்கு டிராய் கடும் எச்சரிக்கை..!!!
வாடிக்கையாளர்கள் பழையை அழைப்புகளை தொடர்ந்து பெறுவதற்காக அதே எண்களை ரீசார்ஜ் செய்யாமல் விட்டுவிடுகின்றனர்.இதனால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடும் சரிவைச் சந்தித்த நிலையில் புதிய நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளது.அதன் படி போதிய வைப்புத்தொகை இருந்தாலும் கூட மாதம் குறைந்தபட்ச தொகை ரீசார்ஜ் செய்ய வேண்டும் அவ்வாறு இல்லையென்றால் எண்களுக்கான சேவை ரத்து செய்யப்படும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை மிரட்டி வந்தது.
இது மட்டுமல்லாமல் குறைந்தபட்ச ரூபாய்.35 க்கு ரீசார்ஜ் செய்யாமல் இருக்க கூடிய பல மில்லியன் வாடிக்கையாளர்களின் எண்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக சில நிறுவனங்கள் அறிவித்தது.இந்நிலையில் நிறுவனங்களின் இந்த மிரட்டலில் கடும் அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர்கள் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை (TRAI) அமைப்புக்கு இது குறித்து புகார் தெரிவித்தனர்.புகார்கள் ஒன்று அல்லது இரண்டு என வராமல் ஏராளமான புகார்கள் வந்து குவிந்த நிலையில் மாதம் குறைந்தப்பட்ச ரீசார்ஜ் செய்யாத காரணத்தை கொண்டு எண்களின் அழைப்பை துண்டிக்கக்கூடாது. மேலும் மூன்று நாட்களுக்கு முன்னரே சேவை காலாவதியாகின்ற தேதி குறித்த விபரங்கள் அடங்கிய தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் டிராய் தொலைத்தொடர்வு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறது.மேலும் காலவதி ஆகுகின்ற தேதிக்கு முன்னரே இணைப்பை துண்டிக்கக் கூடாது என்றும் டிராய் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.டிராய் இந்த நடவடிக்கையால் வாடிக்கையாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.