ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்யும் பணிகள் தீவிரம் !
பாலத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்யும் பணிகள், ராமேஸ்வரம் பாம்பன் ரயில்வே பாலத்தில் மேற்கொள்ளப்பட்டது.
பாலம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் கடந்த நிலையில் மனிதர்களால் இயக்கப்படும் தூக்குபாலத்திற்குப் பதில் எலக்ட்ரானிக் முறையில் இயங்கும் புதிய தூக்கு பாலத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டு கடந்த ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் தூக்கு பாலத்தைத் தாங்கி நிற்கும் 8 தூண்களின் உறுதித் தன்மை குறித்து தண்ணீருக்கு அடியிலும் தண்ணீரில் மிதந்தவாறும் ஆய்வு செய்யும் ரோபோ ரிமோட் கருவி மூலம் ஆய்வு செய்யப்பட்டது.
இரண்டு நாட்கள் ஆய்வு நடத்தப்படும் என்றும் ஆய்வு முடிவுகள் ரயில்வே நிர்வாகத்திடம் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.