ராமேஸ்வரம் பகுதியில் பலத்த சூறாவாளி, கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை!
பலத்த சூறாவாளி காற்றுடன் ராமேஸ்வரம் அரிச்சல்முனை பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தனுஷ்கோடி கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த சூறைக்காற்று வீசிவருகிறது. இதனால் சுமார் 20அடி உயரத்திற்கு ராட்ச அலை எழுகின்றது. மேலும் சூறைக்காற்று பலமாக வீசுவதால் சாலைகளின் இருபுறங்களிலும் மணல் மூடிக் காணப்படுகின்றது. தனுஷ்கோடி கம்பிபாடு வரை மட்டுமே செல்ல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இதையடுத்து அப்பகுதியில் தடுப்புவேலி அமைத்து சுற்றுலாபயணிகளின் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.