ராமநாதபுரம் அருகே விழாவுக்கு வந்த இருவர் இரவில் வெட்டிப் படுகொலை!

Default Image

காதணி விழாவிற்கு வந்த இருவர், ராமநாதபுரம் அருகே இரவில் உறங்கிக் கொண்டிருந்த போது முகமூடி அணிந்த மர்மநபர்களால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

வாலாந்தரவை கிராமம் அருகே போலையன் நகரில் செல்வம் என்பவரின் இல்ல காதணி விழாவில் அதே பகுதியை சேர்ந்த விஜய், பூமிநாதன் மற்றும் மற்றுமொரு விஜய் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா முடிந்த நிலையில் செல்வம் வீட்டின் பின்புறம் உள்ள தோப்பில் அவர்கள் மூவரும் உறங்கியுள்ளனர்.

இதனை அறிந்து கையில் அரிவாள், கத்தி உள்ளிட்டவற்றுடன் முகமூடி அணிந்து அங்கு வந்த 10க்கும் மேற்பட்ட மர்மநபர்கள் பூமிநாதன் மற்றும் விஜய் ஆகியோரின் கழுத்தில் சரமாரியாக வெட்டினர்.

இதில் சம்பவ இடத்திலேயே விஜய் மற்றும் பூமிநாதன் இறந்து விட, மற்றொரு விஜய் உயிர் பயத்தில் அலறியுள்ளார். 17 வயது சிறுவனான அவரையும் விட்டு வைக்காத கும்பல், தலையில் வெட்டி விட்டு தப்பி ஓடியது. சத்தம் கேட்டு அங்கு சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது கவலைக்கிடமாக உள்ள விஜய்க்கு மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார், கொலை செய்யப்பட்டவர்களின் உடலை உடற்கூறாய்வுக்கு எடுத்துச் செல்ல முயன்ற போது உறவினர்கள் கொடுக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கொலை செய்தவர்களை கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்ததை அடுத்து உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. கொலைச் சம்பவம் குறித்து கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இரட்டை கொலை நடந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest