மன நோயாளி போல் நடித்துக்கொண்டு பரமக்குடியில் பெண்களிடம் சில்மிஷம் செய்த நபரை செருப்பால் அடித்து தட்டிக்கேட்ட உதவி காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளது சக காவலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள எமனேஸ்வரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் முனியசாமி. இவர் கடந்த மாதம் 22 ந்தேதி பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது அந்த பக்தியில் நடந்து செல்லும் பெண்களிடம், அழுக்கு சட்டை அணிந்த நபர் ஒருவர் வம்பு செய்வதும், சில்மிஷத்தில் ஈடுபடுவதுமாக இருந்தார். கடைவீதிக்கு சென்று விட்டு திரும்பிய அவரது மனைவியிடமும் ஆபாச சைகை காட்டினார்..!
போலீசை பார்த்ததும் மன நிலை பாதிக்கப்பட்டவர் போல அந்த நபர் நடந்து கொண்டதாக கூறப்படுகின்றது.
பெண்களிடம் ஏன் தவறாக நடந்து கொள்கிறாய் என தட்டிக்கேட்ட சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் முனியசாமியிடம் , அவரது மனைவி குறித்து அவதூறாக பேசி உள்ளார் அந்த அழுக்கு சட்டை நபர்..! அவ்வளவு தான் அடுத்த நொடி காலில் கிடந்த செருப்பை கழட்டி அந்த நபரை அடித்து துவைத்து விட்டார் முனியசாமி..!
இந்த சம்பவம் நடக்கும் போது பாதிக்கப்பட்ட அவரது மனைவி அருகில் இருந்ததாக கூறப்படுகின்றது. ஆனால் உதவி ஆய்வாளர் முனியசாமி மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட நபர்கள், கடந்த இரு தினங்களுக்கு முன்பு மனநிலை பாதிக்கப்பட்ட அப்பாவி முதியவரை, காவல் உதவி ஆய்வாளர் அடித்து உதைப்பதாக வாட்ஸ் ஆப். முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி உள்ளனர். இதையடுத்து உதவி காவல் ஆய்வாளர் முனியசாமி ஆயுதப்படைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். இன்னும் 10 நாட்களில் முனுசாமி ஓய்வு பெற இருப்பது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் பெண்களை கிண்டல் செய்த அந்த நபர் தற்போது வரை அழுக்கு சட்டையுடன் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவது தொடர்ந்து வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பொதுவாகவே பொதுமக்களின் புகார்களை காவல்துறையினர் விசாரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்த நிலையில் பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டவரை, தாமாக முன்வந்து தட்டிக்கேட்ட காவல் ஆய்வாளர் முனியசாமிக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் சக காவல்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…