ராமநாதபுரத்தில் திடீரென நிலவெடிப்பு!மக்கள் பீதி…

Default Image

தமிழ்நாட்டின் தென்கோடி மாவட்டமான ராமநாதபுரத்தில் ஒரு குடியிருப்புப் பகுதி அருகே திடீரென ஏற்பட்ட நில வெடிப்பு காரணமாக அப்பகுதி மக்கள் வீடுகளை காலி செய்து மரத்தடியில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இன்று காலை முதல் நிலத்தில் பல இடங்களில் பாளம் பாளமாக வெடிப்பு ஏற்பட்டுள்ளது.இதன் அருகாமையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக ஓ.என்.ஜி.சி குழாய்கள் பதிக்கப்பட்டு அவை பயன்பாட்டில் உள்ள நிலையில் தற்போது புதிதாக ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் பூமிக்கு அடியில் இயற்கை எரிவாயு இருக்கிறதா என்று சோதனை நடத்துவதற்காக 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை கிணறுகள் அமைத்து நிலப்பகுதியில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இன்று காலையில் ஏற்பட்ட வெடிப்பு அப்பகுதியைச் சுற்றிலும் பரவியதோடு வீடுகளுக்குள்ளும் பரவியதால் அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் உடமைகளுடன் வீடுகளை காலி செய்து திருப்புல்லானி – கீழக்கரை சாலையில் அமைந்துள்ள புளிய மரத்தடியில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து கீழக்கரை வட்டாச்சியர் ராஜேஸ்வரி மற்றும் இராமநாதபுரம் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை சிறப்பு வருவாய் கண்காணிப்பாளர் (சுரங்கம்) ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து தரை விரிசல் குறித்து ஆய்வு ஆய்வு செய்து விட்டு சென்றனர்.

ஆய்வின் முடியில் தரையில் ஏற்ப்பட்ட விரிசல் மழை இல்லாததால் ஏற்பட்ட நிலத்தடி நீர் பற்றாக்குறை காரணமாக ஏற்பட்டது என குறிப்பிடப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்