ராமதாஸின் ஒரே கேள்வி..! ஆடிப்போன தமிழக அரசு..!
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரரிவாளன் விடுதலை எப்போது எனவும், இது தொடர்பாக ஜெயலலிதா தந்த அறிவிப்பு என்ன ஆனது என தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
1991ஆம் ஆண்டு ஜுன் 11ம் தேதி சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறு விசாரணை என அழைத்து சென்றனர். பின்னர் பேரரிவாளன் தந்த வாக்கு மூலத்தை திரித்து எழுதி அவருக்கு நீதிமன்றத்தில் தூக்கு தண்டணை பெற்று தந்தது.
பின்னர் பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தை திரித்து பதிவு செய்ததன் மூலம் அவருக்கு தூக்குத் தண்டனை கிடைக்க தாம் காரணமாகி விட்டதாக வழக்கின் விசாரணை அதிகாரி தியாகராஜன் ஒப்புக்கொண்டதுடன், அதை உச்சநீதிமன்றத்தில் மனுவாகவே தாக்கல் செய்திருந்தார்.
அதன் அடிப்படையில் அவர்களுக்கு விடுதலை வாங்கி தர முடியும். அதே சமயம் நீதிமன்றம் பேரரிவாளன் உட்பட 7 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றியது. நீதிமன்றம் அளித்த தீர்ப்பை விட அதிக காலம் சிறையில் கழித்து விட்டார்கள் இன்னும் ஏன் விடுதலை செய்யப்படவில்லை என ராமதாஸ் கேட்டுள்ளார்.
மேலும், 2014 சட்டமன்ற கூட்டத்தில் 110 விதியின்கீழ் அறிவிப்பு வெளியிட்ட அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை முடிவு செய்திருப்பதாகவும், இதுகுறித்த தனது கருத்தை மத்திய அரசு 3 நாட்களுக்குள் தெரிவிக்காவிட்டால் அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுவார்கள் என அறிவித்தார்.
இவ்வாறு அறிவிப்பை வெளியிட்டு விடுதலை செய்யாமல் இருப்பது கண்டிக்கதக்கது. மேலும் மத்திய மாநில அரசுகள் இதற்கு ஒரு முடிவெடுத்து உடனடியாக அவர்களை விடுதலை செய்யுமாறு தமிழக அரசை எச்சரித்து உள்ளார் ராமதாஸ்.