ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக கடிதம்!மத்திய அரசு
ஆயுள் தண்டனை கைதிகளாக ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர். 25 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் சிறையில் இருந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது.
இந்நிலையில், சிறையில் உள்ள 7 பேரின் உடல் மற்றும் மனநிலை, அவர்களது சிறைத்தண்டனை, குடும்ப சூழல், வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய அரசு இன்று கடிதம் அனுப்பியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.