ராகுல் காந்தி மதச்சார்பற்ற ஜனதாதளத்தை காவி கட்சி என கூறிய நிலையில், கர்நாடகாவில் தற்போது கூட்டணி அமைத்திருப்பது ஏன்? தமிழிசை
தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,மதச்சார்பற்ற ஜனதாதளத்தை ராகுல் காந்தி காவி கட்சி என்று கூறி வந்த நிலையில் தற்போது கர்நாடகாவில் அந்தக் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கர்நாடகாவில் பா.ஜ.க எப்படி ஆட்சி அமைக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்குமாறு கூறியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைந்தால் தான் தமிழகத்துடன் நல்லுறவு மேம்படும் என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.