ரவுடிகள் தமிழகத்தில் இருக்க முடியாமல் பிற மாநிலங்களுக்கு ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது!
முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதால் தான் ரவுடிகள் தமிழகத்தில் இருக்க முடியாமல் அடுத்த மாநிலத்திற்கு ஓடும் நிலையில் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இது தொடர்பாக பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ரவுடிகள் எல்லா ஆட்சியிலும் இருந்தார்கள் என்றும், ஆனால் தாங்கள் அவர்களை கண்டுபிடித்து கைது செய்துள்ளதாகவும் கூறினார்.
அப்போது குறிக்கிட்டு பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், எல்லா ஆட்சியிலும் ரவுடிகள் உள்ளனர் என்றும், ஆனால் கேக் வெட்டியது உங்கள் ஆட்சியில்தான் என குறிப்பிட்டார்.
இதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடுமையான நடவடிக்கை எடுத்ததால் தான் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், மேலும் தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.