” ரஜினி ரசிகர்களின் சேட்டைய பாருங்க ” 1 மணி நேரத்துக்குள் கொண்டாட்டமா..?
சூப்பர்ஸ்டார் ரஜினியின் பேட்ட தலைப்புக்கு சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் மத்தியில் மிக பிரமாண்டமான ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது.
படத்தின் மோஷன் போஸ்டர் ஒரு மணி நேரம் 10 நிமிடத்தில் 4 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. விரைவில் 5 லட்சத்தை தொடவுள்ளது.
இந்நிலையில் ரஜினி ரசிகர்கள் சிலர் படத்தின் தலைப்பு வெளியான ஒரு மணி நேரத்திற்குள் போஸ்டர், பேனர் என பிரிண்ட் செய்து கலக்கிவருகின்றனர்.
ஒரு ரசிகர் அதற்குள் தன் காரின் கண்ணாடியில் பேட்ட என்ற ஸ்டிக்கரை ஒட்டி அதனுடன் போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
DINASUVADU