ரஜினி அரசியல் கட்சி தொடங்கி மக்களுக்கு எதிராக செயல்பட்டால் நிச்சயம் எதிர்ப்பேன்! பா.இரஞ்சித் அதிரடி
உலகமெங்கும் இன்று ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் ரிலீசாகி இருக்கிறது. பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்திருக்கிறார். காலா படத்தை தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
இன்று அதிகாலை காலா திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள திரையங்குகளில் வெளியானது. திரையரங்குகளுக்கு முன்பிருந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும், நடனமாடியும் கொண்டாடினர்.
இயக்குனர் பா.ரஞ்சித் கருத்து:
ரஜினி அரசியல் கட்சி தொடங்கினால் மக்களுக்காக இணைந்து பணியாற்றுவேன்; மக்களுக்கு எதிராக செயல்பட்டால் முரண்படுவேன் என்று இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
மேலும் ரசிகர்களின் உற்சாகத்தை இயக்குனர் பா.ரஞ்சித் திரையரங்குக்கு சென்றிருக்கிறார். ரசிகர்களின் உற்சாகத்தில் திகைத்துப் போன இயக்குனர் ரஞ்சித், இப்படம் குறித்து கூறும்போது, ‘காலா படத்துக்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வருவது மகிழ்ச்சியளிக்கிறது. ரஜினியின் அரசியலுக்காக காலாவை எடுக்கவில்லை. மக்கள் பிரச்னைக்காக எடுக்கப்பட்ட படம். கர்நாடகாவில் ஒரு சில இடங்களில் காலா திரைப்படம் வெளியாகவில்லை. இது வருத்தம் அளிக்கிறது’ என்றார்.மேலும் நீங்கள் இயக்குநரா?
இல்லை அரசியல்வாதியா? என்ற கேள்விக்கு பா.ரஞ்சித் நான் அரசியல்வாதி தான் என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.