ரஜினிகாந்த் அளித்த பேட்டி தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியீட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது :
ரஜினியின் கருத்து ஸ்டெர்லைட் ஆலையின் குரல்
தூத்துக்குடியில் போராடிய அனைவரும் சமூக விரோதிகளா?
ரஜினி வேண்டுமானால் போராடாமல் யாருக்கும் அடிமையாக இருந்துவிட்டு போகட்டும்
முன்னதாக இன்று நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றார். துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை சந்திக்கிறார், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் ஆறுதல் கூறினார்.நடிகர் ரஜினிகாந்த்.அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பின்னர் முதல்முறையாக மக்கள் பிரச்னைக்காக களம் இறங்குகிறார் ரஜினிகாந்த். சென்னையிலிருந்து இன்று காலை ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு புறப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நலம் விசாரித்த பின் செய்தியாளர் சந்திப்பில் ரஜினிகாந்த் கூறியது:
தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுறுவியுள்ளனர் .சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஜெயலலிதா அடைக்கி வைத்திருந்தார்.சமூக விரோதிகளை அடக்க ஜெயலலிதாவின் வழியை தமிழக அரசு பின்பற்ற வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களின் குடியிருப்புகளை எரித்தது பொதுமக்கள் இல்லை, சமூக விரோதிகளே என்று ரஜினிகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் எண்ணம் நிர்வாகத்திற்கு வரவே கூடாது.போராட்டம் நடத்தும் போது பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்களை சிலர் தூண்டிவிடுகின்றனர் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சமூகவிரோதிகள் உள்ளே வந்ததை கண்டுபிடிக்க தவறியது உளவுத்துறையின் தவறு.
போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் சமூகவிரோதிகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். தொடர்ந்து போராட்டம் நடைபெற்றால் தமிழகத்தில் எப்படி தொழில்துறை வளர்ச்சி அடையும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் போல் இனி நிகழக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும் “எல்லா பிரச்சனைகளிலும் முதல்வரை ராஜினாமா செய்யச் சொல்வது நியாயமாகாது”.காவல்துறையினரை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; அவர்களை விட்டுவிடக் கூடாது. தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரித்துவிட்டனர்” என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…