ரஜினியின் தூத்துக்குடி கலவரம் தொடர்பான குரல் பாஜக குரலா? அல்லது அதிமுக குரலா? என்பது சந்தேகமாக உள்ளது என்று திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து புதுச்சேரியில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின்கூறுகையில்,தூத்துக்குடி கலவரத்திற்கு சமூக விரோதிகள் தெரியும் என்ற ரஜினி நாட்டிற்கு அவர்களை அடையாளம் காட்ட வேண்டும். சமூக விரோதிகளை ரஜினி அடையாளம் காட்டுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
போராட்டம் இல்லாத வாழ்க்கை இல்லை. ஜல்லிக்கட்டு அனுமதிக்கு போராட்டம் மூலமே தீர்வு காணப்பட்டது என்பது ரஜினிக்கு தெரியும்.
நேற்று தூத்துக்குடியில் ரஜினிகாந்த்:
நடிகர் ரஜினிகாந்த் நேற்று தூத்துக்குடி சென்றார். துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை சந்திக்கிறார், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் ஆறுதல் கூறினார்.
நேற்று நலம் விசாரித்த பின் செய்தியாளர் சந்திப்பில் ரஜினிகாந்த் கூறியது:
தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுறுவியுள்ளனர் .சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஜெயலலிதா அடைக்கி வைத்திருந்தார்.சமூக விரோதிகளை அடக்க ஜெயலலிதாவின் வழியை தமிழக அரசு பின்பற்ற வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களின் குடியிருப்புகளை எரித்தது பொதுமக்கள் இல்லை, சமூக விரோதிகளே என்று ரஜினிகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் எண்ணம் நிர்வாகத்திற்கு வரவே கூடாது.போராட்டம் நடத்தும் போது பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்களை சிலர் தூண்டிவிடுகின்றனர் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சமூகவிரோதிகள் உள்ளே வந்ததை கண்டுபிடிக்க தவறியது உளவுத்துறையின் தவறு
போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் சமூகவிரோதிகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். தொடர்ந்து போராட்டம் நடைபெற்றால் தமிழகத்தில் எப்படி தொழில்துறை வளர்ச்சி அடையும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் போல் இனி நிகழக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவி என்றும் அறிவித்துள்ளார்.முதற்கட்டமாக 9 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…