ரஜினிகாந்த் என்கிற சினிமா டயலாக் சொல்லாதீங்க நான் அரசியல்வாதி என்று திமிராக பதில் கூறியுள்ளார் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து பேசினார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
தமிழக ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்தபின் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பேசியதாவது, திமுகவை விட அதிமுக ஆட்சி நன்றாக இருக்கிறது. திமுகவுக்கு எதிர்காலம் இல்லை. தமிழக சூழல் குறித்தும், டெல்லியிலிருந்து எனக்கு கிடைத்த தகவல்கள் குறித்தும் ஆலோசித்தோம். தமிழகத்தில் பல பயங்கரவாத சக்திகள், மக்களின் பின்னால் ஒளிந்து கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு வருத்தம் தெரிவிக்காதது பற்றி பிரதமரிடம் கேட்பேன். தமிழகத்தில் தடைச்செய்ய இயக்கங்கள், கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்களால் தீவிரவாதம் அதிகரித்துள்ளது.
மேலும் ரஜினிகாந்த் குறித்த கேள்விக்கு மிகவும் கிண்டலாக பதில் கூறியுள்ளார் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.
ரஜினிகாந்த் குறித்த கேள்விக்கு அவர் பதில் கூறியதாவது, ரஜினிகாந்த் என்கிற சினிமா டயலாக் சொல்லாதீங்க நான் அரசியல்வாதி என்று கிண்டலாக பதில் கூறியுள்ளார் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.இதேபோல் அரசியலில் இருந்து நடிகர்கள் சற்று விலகியே இருக்க வேண்டும் .ரஜினியின் பேச்சுக்கள் அனைத்தும் சினிமா வசனங்கள் போன்று உள்ளன என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…