ரஜினிகாந்த் சொன்னது சரிதான் …!மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார்..!
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் காவல்துறையினர் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை மாநில கல்லூரி ஆண்டுவிழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை குறித்த ரஜினிகாந்தின் கருத்தை வரவேற்பதாக தெரிவித்தார்.
காவிரி பிரச்னையில் வன்முறை எந்த நிலையிலும் தீர்வாகாது என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக எம்.பி.,க்கள் நாடாளுமன்றத்தை அறவழியில் முடக்கியதை சுட்டிக்காட்டினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.