ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு ….!விஜய்க்கு ரஜினி மக்கள் மன்றத்தில் முக்கிய பதவி …!

Default Image

குன்றத்தூரில் தனது மனைவியால் 2 குழந்தைகளை இழந்த விஜய் என்பவர் ரஜினி மக்கள் மன்றத்தின் குன்றத்தூர் ஒன்றிய இளைஞரணி இணைச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை குன்றத்தூர் அருகே, பிரியாணிக் கடை நடத்திவரும் சுந்தரம் என்பவரின்மீது கொண்ட காதலால், பெற்ற குழந்தைகளை கொன்று விட்டு தப்பி செல்ல முயன்ற அபிராமியை காவல்துறையினர் கைது செய்து தற்போது புழல் சிறையில் அடைத்தனர்.

இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அபிராமியின் கணவர் விஜய்யை, நடிகர் ரஜினிகாந்த் போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து ஆறுதல் கூறியுள்ளார்.

விஜய்

அப்போது, விஜய்யின் கைகளைப் பற்றிக்கொண்டு, “எந்த ஆறுதலும், இந்தக் கொடிய நிலைமைக்கு மருந்தாகாது. மீண்டு வாருங்கள் விஜய்; ஆண்டவன் துணை இருப்பான். நாங்க இருக்கோம்” என்று கலங்கிய கண்களுடன் ரஜினி தெரிவித்துள்ளார். ரஜினியைக் கண்டதும் விஜய் மனக்குமுறலால் உடைந்து அழுதுள்ளார். இது தொடர்பாக விஜய்யிடம் பேசுகையில்,“நான் ரஜினியின் தீவிர ரசிகன். அதே போல என்னுடைய குழந்தைகளுக்கும் நடிகர் ரஜினிகாந்த் மிகவும் பிடிக்கும். அவரைப் போலவே பேசும், சைகைகளைச் செய்து காட்டும்” என்று உடைந்த குரலில் பேசினார் விஜய்.

இந்நிலையில் விஜய் என்பவர் ரஜினி மக்கள் மன்றத்தின் குன்றத்தூர் ஒன்றிய இளைஞரணி இணைச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்