பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி,காலா திரைப்படம் மத்திய, மாநில ஆட்சியாளர்களின் எதிர்ப்பு இல்லாமல் எளிதாக வெற்றி பெற 1000 மடங்கு வியாபாரியாக சிந்தித்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை கொச்சைப்படுத்தியுள்ளதாக ரஜினிகாந்திற்கு பகிரங்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இது குறித்து பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: காலா திரைப்படத்தின் முக்கிய நோக்கமே மத்திய, மாநில அரசுகளை எதிர்ப்பது, காவல்துறையை தவறாக சித்தரிப்பது என்பதாகவே தெரிகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற அறவழி போராட்டம் வன்முறையாக மாறியதும், அதில் அப்பாவி பொதுமக்கள் காவல்துறையினரின் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதும், காலா திரைப்பட காட்சிகளோடு ஒத்துப் போவதை அறிந்து திரைப்படத்தை வெளியிட கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதை நீங்கள் முன்னதாகவே நன்கு உணர்ந்திருக்கிறீர்கள்.
ஏற்கனவே காவிரி விவகாரத்தால் கர்நாடகாவில் காலாவை வெளியிட கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்திற்கு ஏற்பட்ட நிலை உங்களது காலா திரைப்படத்திற்கும் வந்து, அதன் காரணமாக பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு விடுமோ என சிந்தித்த தாங்கள், நீங்களாகவே முந்திக்கொண்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் சமூக விரோதிகள் போலவும், எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிப் போகும் எனவும் பேசி மத்திய, மாநில ஆட்சியாளர்களின் ஆதரவையும், காவல்துறையினரின் ஆதரவையும் பெற முயற்சி செய்திருப்பது தங்களின் தொடர் பேச்சுக்கள் தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது.
மேலும் “காலா” திரைப்படத்தில் நடித்த நீங்கள் தலைசிறந்த நடிகர் என்பதை தற்போது நிஜ வாழ்விலும் நிருபித்துள்ளீர்கள். உங்கள் திரைப்படம் வெற்றி பெறுவதற்காக மக்களின் உரிமைப் போராட்டங்களையும், அறவழியில் போராடுபவர்களையும் கொச்சைப்படுத்துவதையும், போன்ற போலியான நடவடிக்கைகளையும், அறிக்கைகளையும் இனியாவது நிறுத்திக் கொள்ளுங்கள். காலா திரைப்படம் மத்திய, மாநில ஆட்சியாளர்களின் எதிர்ப்பு இல்லாமல் எளிதாக வெற்றி பெற 1000 மடங்கு வியாபாரியாக ரஜினி மாறியுள்ளார். இவ்வாறு அந்த கடிதத்தில் பால் முகவர்கள் சங்கத்தலைவர் பொன்னுச்சாமி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…