யூ டியூப் வீடியோவால் கணவன் செய்த செயல் ..!கர்ப்பமான மனைவி மரணம்!
யூ டியூப் உதவியுடன் பிரசவம் பார்த்ததில் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவத்தில் பொது சுகாதாரத்துறை அளித்த புகாரின் பேரில் கணவர் மீது திருப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் அருகே உள்ள புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன்.இவருக்கு கிருத்திகா என்ற மனைவி உள்ளார்.இவருக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.சில நாட்களுக்கு முன்னால் கிருத்திகா மீண்டும் கர்ப்பமானார்.
திடீரென ஒருநாள் இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.உடனே கார்த்திகேயன் தனது நண்பரின் ஆலோசனைப்படி மனைவிக்கு யூ டியூப் உதவியுடன் பிரசவம் பார்த்துள்ளார்.இதனால் பரிதாபமாக கிருத்திகா உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது திருப்பூர் காவல்துறையினர் யூ டியூப் உதவியுடன் பிரசவம் பார்த்ததில் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவத்தில் பொது சுகாதாரத்துறை அளித்த புகாரின் பேரில் கணவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.