“யார் நீங்க” கூகுல் ட்ரெண்டில் இடம்பிடித்த ரஜினி..!
நலம் விசாரித்த பின் செய்தியாளர் சந்திப்பில் ரஜினிகாந்த் கூறியது:
போராட்டம் நடத்தும் போது பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்களை சிலர் தூண்டிவிடுகின்றனர் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சமூகவிரோதிகள் உள்ளே வந்ததை கண்டுபிடிக்க தவறியது உளவுத்துறையின் தவறு
போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் சமூகவிரோதிகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். தொடர்ந்து போராட்டம் நடைபெற்றால் தமிழகத்தில் எப்படி தொழில்துறை வளர்ச்சி அடையும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் போல் இனி நிகழக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அப்போது பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் ரஜினிகாந்தைப் பார்த்து யார் நீங்கள் என்று கேட்டுள்ளார். ரஜினிகாந்த் சினிமாவில் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அடிக்கடி மாறுவேடம் அணிந்து நகர்வலம் சென்று மக்களின் நிலையை அறிந்துள்ளதாகவும், மாறுவேடமின்றி சென்றால் மக்கள் கூட்டம் சூழ்ந்து விடும் என்றும் கூறியுள்ளார். ஆனால் இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்தைப் பார்த்து தூத்துக்குடி இளைஞர் நீங்கள் யார் என்று கேட்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அந்த இளைஞர் வேண்டுமென்று அப்படி கேட்டாரா? இல்லை சினிமாவில் இருக்கும் ரஜினிக்கும் நிஜத்தில் இருக்கும் ரஜினிக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதால் அப்படி கேட்டாரா என்பது தெரியவில்லை.
இந்த செய்தி தற்போது கூகுலில் ட்ரெண்டாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்…