யாரையும் தூத்துக்குடியில் சட்டவிரோதமாக கைது செய்யக்கூடாது! தமிழக அரசுக்கு நோட்டீஸ் !

Default Image

உயர்நீதிமன்ற மதுரை  கிளை,தூத்துக்குடியில் காவல்துறையினர் சட்டவிரோதமாக யாரையும் கைது செய்யக்கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப  உத்தரவிட்டுள்ளது.

 உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ,சட்டவிரோதமாக  கைது செய்யப்பட்டவர்கள் ஆயுதப்படை முகாமில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் புகார் குறித்து தூத்துக்குடி மாவட்ட நீதிபதி ஆய்வு செய்ய இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக் கோரியும் 144 தடை உத்தரவின் முழுவிபரத்தை தெரியபடுத்த உத்தரவிட கோரியும் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு  விசாரணைக்கு வந்தபோது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் 144 தடை உத்தரவு தொடர்பாக அறிக்கை தர மறுக்கின்றனர் என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள் 144 தடை உத்தரவு என்பது பொதுவான விஷயம்தானே, அதை பொதுமக்களிடம் கொடுப்பதற்கு ஏன் தயக்கம் என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து வழக்கு குறித்து தமிழக உள்துறை செயலர், டிஜிபி, தூத்துக்குடி ஆட்சியர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்