இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே அரபு நாட்டில் வேலை செய்து வந்தவரின் மனைவியிடம் வேறு ஒருவர் வைத்த தொடர்பை கண்டிக்க சொல்லி காவல்நிலையம் அழைத்து சென்ற போது விசாரணை நடத்திய காவல்துறையினர் கண்டிப்பதை விட்டுவிட்டு விருப்பிய பையனுடன் போலீசாரே அனுப்பி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து போலீசாருடன் அந்த பெண்ணின் உறவினர்கள் வாக்குவாதம் செய்த போது போலீஸ் அதிகாரி , சட்டமே சொல்லி விட்டதாம் யாரு பொண்டாட்டிய யாரு வேணும்னாலும் கூட்டிட்டு போகலாம் என்று சொல்லி இங்கு நான் சொல்றதுதான் சட்டம் என்று கூறியதாக தெரிவிக்கின்றனர். மேலும் உறவினர்கள் தெரிவிக்கையில் ,பெண்ணை கோர்ட்டுக்கு கூட்டிட்டு போகாமல் டைவட்ஸ் க்கு அப்ளை செய்ய சொல்லாமல் கூட்டிகிட்டு போன பையனுடன் உடனே அனுப்பி வைத்த கொடுமை மிகவும் மோசமானது என்றும் கண்டிக்கப்பட வேண்டியது என்றும் தெரிவித்தனர்.
அது மட்டுமில்லாமல் காவல்துறையிடம் நடந்த வாக்குவததையும் , போலீஸ் பேசிய சட்டமே சொல்லி விட்டதாம் யாரு பொண்டாட்டிய யாரு வேணும்னாலும் கூட்டிட்டு போகலாம் என்று சொல்லி இங்கு நான் சொல்றதுதான் சட்டம் என்று சொல்லிய வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
DINASUVADU
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…