” யாரும் கார் ஓட்டாதீங்க ” வினோதமாக கொண்டாடும் தூத்துக்குடி மக்கள்…
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் 2–வது வாரமாக கார் இல்லா ஞாயிறு நிகழ்ச்சி நடந்தது. இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பல்வேறு விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர்.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், தூத்துக்குடி மாநகராட்சி, மாவட்ட போலீஸ் துறை இணைத்து தூத்துக்குடி மாநகர மக்களுக்காக சார்பில் வாரம் தோறும் ஞாயிற்று கிழமைகளில் புத்துபுது வடிவங்களில் கொண்டாடி வருகின்றனர்.அந்த வகையில் கார் இல்லா ஞாயிறு என்ற நிகழ்ச்சி நடக்கிறது. அதன்படி நேற்று காலை 2–வது வாரமாக தூத்துக்குடி ரோச் பூங்கா அருகே கார் இல்லா ஞாயிறு என்ற நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் என திரளானோர் பங்கேற்றனர். அவர்கள் காலை 6 மணி முதல் மணி 8 வரை 2 மணி நேரம் கார், உள்ளிட்ட வாகனத்தை சாலையில் நிறுத்தாமல் , நடு ரோட்டில் சைக்கிள் ஓட்டியும், கைப்பந்து, இசைநாற்காலி, ஸ்கேட்டிங் உள்ளிட்ட விளையாட்டுக்களை விளையாடி மகிழ்ந்தனர்.
DINASUVADU