மோடி அரசு காவி …!ஸ்டாலின் சும்மா பேசுனாரு …!அத சீரியஸா எடுக்க கூடாது …!ஸ்டாலின் துதிபாடும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஸ்டாலின் மோடி அரசு குறித்து விமர்சித்ததற்கு பதில் கூறியுள்ளார்.
நேற்று மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்தில் க.அன்பழகன், மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன் பின் திமுக தலைவராக மு.க.ஸ்டாலினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் பொதுச்செயலாளர் க.அன்பழகன்.இதனால் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.அதேபோல் திமுக பொருளாளராக துரைமுருகன் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டார்.
மேலும் திமுக செயல் தலைவர் பதவிக்கான கட்சி விதி பிரிவு 4 நீக்கப்பட்டதாக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.
இதன் பின் திமுக தொண்டர்கள் அனைவரும் ஸ்டாலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து இனிப்புகள் வழங்கியும்,பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.
இதன் பின்னர் திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தனது முதல் உரையை இன்று ஆரம்பித்தார்.அவர் பேசுகையில்,திராவிட முன்னேற்றக் கழகத்தின் இதயமாம் பொதுக்குழுவில், கழகத்தின் தலைவராய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். தமிழர்களையும், தமிழினத்தையும் போற்றிப் பாதுகாத்த , தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரின் வழியில் என்றைக்கும் பயணிப்பேன் என உறுதியேற்கிறேன்.
அதேபோல் இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மத்திய அரசுக்கு பாடம் புகட்ட வா,முதுகெலும்பில்லாத இந்த மாநில அரசை தூக்கி எரிய வா, அழகான எதிர்காலத்தை ஒன்றாக நாம் மெய்பிப்போம், இந்த அழைப்பு தென்றலை தீண்ட அல்ல. தீயைத் தாண்டுவதற்கு என்று தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஸ்டாலின் மோடி அரசு குறித்து விமர்சித்ததற்கு பதில் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், எத்தனை கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் பாஜகவை வெல்ல முடியாது .திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்கும்போது, ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக பாஜகவை பற்றி பேசியிருக்கலாம் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
DINASUVADU