"மொத்த பூ கடைகளுக்கும் சீல்"உயர்நீதிமன்றம் உத்தரவு…

Default Image

சென்னை பாரிமுனை பத்ரியன் தெருவில் உள்ள மொத்த பூ விற்பனை கடைகளின் வர்த்தகத்தில் அரசு அதிகாரிகள் தலையிட தடை விதிக்க வேண்டும் என முருகன் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தபோது, 22 ஆண்டுகளுக்கு முன்பே கடைகளை காலி செய்ய அரசு உத்தரவிட்டும், சீல் வைத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பூக்கடைகளின் உரிமையாளர்கள் அரசு வைத்த சீலை உடைத்து மீண்டும் வர்த்தகம் செய்து வருவதாக விளக்கமளிககப்பட்டது.
அவர்களை அங்கு தொடர்ந்து வர்த்தகம் செய்ய அனுமதித்தால் மக்களுக்கு நீதித்துறையின் மீதும் சட்டத்தின் ஆட்சியின் மீதும் நம்பிக்கை இழக்க செய்துவிடும் எனத் தெரிவித்த நீதிபதி, இந்த உத்தரவு நகல் கிடைத்த 48 மணி நேரத்திற்குள் அந்த கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், சீல் வைக்கும் நடவடிக்கைகளை வீடியோ பதிவு செய்ய வேண்டும், அந்த பகுதியில் காவல் உதவி மையம் அமைத்து மீண்டும் கடைகள் திறக்காத வகையில் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஏற்கனவே வைக்கப்பட்ட சீலை உடைத்தவர்கள் மீதான வழக்குகளை தொடர்ந்து நடத்த அறிவுறுத்திய நீதிபதி, கடைகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அக்டோபர் 22 ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்..
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்