திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ,காவிரி டெல்டா பாசனத்திற்காக வரும் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவதை, மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு, 104 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் குறித்த உத்தரவு அரசிதழில் வெளியிட்டிருப்பது ஓரளவு ஆறுதல் தருவதாக கூறியுள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, ஜூன் 1ஆம் தேதிக்குள் தலைவர், உறுப்பினர்கள் யார், யார் என்ற விவரத்துடன் முழுமையான காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்திருக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆனால், இறுதி வரைவுதிட்டத்தின் அடிப்படையில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும் என்று மட்டுமே அரசிதழில் வெளியாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கும் உத்தரவு அரசிதழில் வெளியானது தமிழக மக்களுக்கு கிடைத்த முதல் வெற்றி என்றும், வரும் 12ஆம் தேதி குறுவை பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டால், ஓரளவேனும் மனநிறைவு ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…