மேட்டூர் அணையின் நீர் மட்டம் உச்ச நிலையை எட்டியது..!

Default Image

கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுவரும் கடுமையான மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளன.இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் உபரி நீர் வெளியேற்றபட்டு வருகின்றன.இந்த உபரி நீர் அதிகமாக வருவதால் ஒகேனக்கல் அணை நிரம்பி வருகிறது.

காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெறுகினால் பல அருவிகள் நீரில் மூழ்கியுள்ளன.ஒகேனக்கலில் குளிக்கவும் தடைவிதிக்கப்பட்டது.அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது. இதனால், ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது

.இரவு 8 மணி முதல் நீர் திறக்கப்பட உள்ளது. முதலில் 200 கன அடி தண்ணீர் திறக்கப்படும். பின்னர் அது படிப்படியாஅக 1000 கன அடி தண்ணீர் திறக்கப்படும். எனவே, கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர் என சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

காவிரி ஆற்றில் அதிக நீர் திறக்கப்பட உள்ளதால் கரூர், திருவாரூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இன்று மேட்டூர் அணையின் நீர் மட்டம், அதன் உச்ச நீர் தேக்கும் அளவான 120 அடியை எட்டியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்