மேட்டூர் அணையின் நீர் திறப்பு குறைந்தது …!

Default Image

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர் திறப்பு குறைந்துள்ளது.
கடந்த சில  நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.இதனால் அணையில் நீர் திறப்பும் அதிமாக திறக்கப்பட்டது.தற்போது மழையின் அளவு குறைந்து உள்ள காரணத்தினால் அணையின் நீர் மட்டமும் ,நீர் திறப்பும் படிப்படியாக குறைந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு 85,000 கனஅடியில் இருந்து 75,800 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 85,000 கனஅடியில் இருந்து 75,000 கனஅடியாக குறைந்து உள்ளது.மேட்டூர் அணை நீர்மட்டம்- 120.21 அடி மற்றும் அணையின் நீர் இருப்பு-93.80 டிஎம்சியாக உள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்