மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு..!
கர்நாடக மாநிலத்திலும் , கேரள பகுதிகளிலும் பெய்து வரும் கன மழை காரணமாக அங்குள்ள கபினி அணை நிரம்பி வழிகிறது. மற்றொரு பெரிய அணையான கிருஷ்ண ராஜசாகர் அணை நிரம்பும் தருவாயில் உள்ளது.இதனால் அங்கு வெள்ள அபாயம் ஏற்படும் அளவுக்கு நீர் சூழ்ந்தது.
இதை தடுக்க கபினி அணைக்கு வரும் நீர் காவிரிக்கு திறக்கப்பட்டது.இதனால இதன் நீரின் அளவும் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
நேற்று காலை முதல் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட நீரின் அளவு 50 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இன்று காலை 45 ஆயிரத்து 150 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் விரைவில் அணை நிறம்பும் .திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக – கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலு, ஒகேனக்கல்லை கடந்து மேட்டூர் அணையை நோக்கி சீறிப் பாய்ந்து வருகிறது.
இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்த வண்ணம் உள்ளது.
நேற்று காலை 34 ஆயிரத்து 426 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை இது 38 ஆயிரத்து 916 கன அடியாக அதிகரித்தது. பிற்பகல் 39 ஆயிரம் கன அடியை தாண்டியது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடு வென்று உயர்ந்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடி, நீர் இருப்பு 41.41 டி.எம்.சியாக உள்ளது.மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 45,000 ஆயிரம் கன அடியில் இருந்து 46,210 கன அடியாக உயர்வு