மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5அடி உயர்ந்து 45அடியாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் கர்நாடகத்தில் இருந்து காவிரியாற்றில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு நொடிக்கு ஆயிரத்து நூறு கனஅடியாகக் குறைந்துள்ளது.
கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 2வாரங்களாக மழை பெய்ததில் 84அடி கொள்ளளவுள்ள கபினி அணையில் 81அடிக்குத் தண்ணீர் நிறைந்துள்ளது. 124அடி கொள்ளளவுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையில் நூறடிக்கு மேல் தண்ணீர் பெருகியுள்ளது.
கபினி அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தபோது அதிலிருந்து நொடிக்கு 35ஆயிரம் கனஅடி நீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் இன்றைய நிலவரப்படி கபினி அணைக்கு நொடிக்கு ஒன்பதாயிரத்து ஐந்நூறு கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவும் நொடிக்கு 729கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நொடிக்குப் பதினோராயிரத்து ஐந்நூறு கனஅடி நீர் வரும் நிலையில் அணையில் இருந்து நொடிக்கு 369கன அடிநீர் வெளியேற்றப்படுகிகிறது. இதனால் கர்நாடகத்தில் இருந்து காவிரியில் தமிழகத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு இன்று நொடிக்கு ஆயிரத்து நூறு கனஅடியாக உள்ளது.
கர்நாடகத்தில் இருந்து காவிரியில் ஏற்கெனவே திறக்கப்பட்ட நீர் நேற்றுக் காலையில் மேட்டூர் நீர்த்தேக்கத்தை வந்தடைந்தது. தொடக்கத்தில் நொடிக்கு 847கன அடியாக இருந்தது படிப்படியாக உயர்ந்து இன்று காலை எட்டுமணிக்கு 32ஆயிரத்து 421கன அடியாக அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 45அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 14புள்ளி எட்டு மூன்று டிஎம்சியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக நொடிக்கு ஐந்நூறு கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கர்நாடகத்தில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு குறைந்துள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் ஓரிரு நாட்களில் குறைந்துவிடும்.
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…