மேகேதாட்டு திட்டத்தை பாஜக தொடர்ந்து எதிர்க்கும் -தமிழிசை சவுந்தரராஜன்…!!
மேகேதாட்டு திட்டத்தை பாரதிய ஜனதா தொடர்ந்து எதிர்க்கும் என்று, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் மக்கள் மருந்தகம் கடையை சென்னை கே.கே.நகரில் அவர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, ரபேல் விவகாரத்தில் தவறான கருத்தை முன்னிறுத்தியதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நாமக்கல் உள்ளிட்ட ஐந்து நாடாளுமன்ற தொகுதிகளில் பாஜக தொண்டர்களுடன் இன்று கலந்துரையாட உள்ளதாக அவர் தெரிவித்தார்.மேகேதாட்டு விவகாரத்தை பாஜக தொடர்ந்து எதிர்க்கும் என்று தமிழிசை கூறினார்.
செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்தது சந்தர்ப்பவாத அரசியல் என்று அவர் விமர்சித்தார்.