மேகதாது ஆணை விவகாரத்தில் தமிழக அரசுடன் பேச தயாரார் என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேகதாதுவில் அணை கட்டும் வரைவு திட்டத்துக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளதை திரும்பப் பெறுமாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் காவிரி நீரை நம்பியுள்ள லட்சக்கணக்கான தமிழக விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்திப்பார்கள் என்று அவர் அந்த கடிதத்தில் தெரிவித்தார்.
இந்த திட்டத்துக்கு தமிழகத்தின் நியாயமான எதிர்ப்பை கருத்தில் கொள்ளாமல், மத்திய நீர்வள ஆணையம் இத்திட்டம் குறித்த வரைவுவை தயாரிக்க கர்நாடக அரசிற்கு அனுமதி அளித்துள்ளதாக முதலமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் மேகதாது விவகாரத்தில் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கின்றோம் என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார்தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் தமிழக அரசிடம் பேசுவதற்கு நேரம் கேட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
dinasuvadu.com
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…