காவிரி வழக்கின் இறுதி தீர்ப்பை மீறும் விதமாக மத்திய அரசு செயல்படுவதாக காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது விவகாரத்தை எழுப்பி தமிழக அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் பங்கேற்றுள்ள காவிரி மேலாண்மை வாரியத்தின் 2-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் தொழில்நுட்பத்துறை தலைவர் சுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட முயற்சி மேற்கொண்டுள்ள கர்நாடக அரசுக்கு இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.
கர்நாடக அரசு மேகதாது குறித்த வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய நீர்வள ஆணையம் அளித்துள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவே மேகதாது அணையை கட்டுவதாக காவிரி ஆணைய வாரிய கூட்டத்தில் கர்நாடகம் வாதிட்டது.கூட்டம் தொடங்கும் முன்பு ஆணைய தலைவர் மசூத் ஹூசேன், கஜா புயல் மற்றும் கேரள புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.
dinasuvadu.com
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…