மெரினா கடற்கரையில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு…!!
உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர், மெரினா கடற்கரையில் நடை பயிற்சி செய்து ஆய்வு மேற்கொண்டார்.
மெரினா கடற்கரையை சுத்தப்படுத்தும் பணிகளை நடைபயிற்சி செய்து பார்வையிடவேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல் ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று ஆலோசனை வழங்கியிருந்தது.
இதையடுத்து இன்று காலை மெரினா கடற்கரையை சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மாநகராட்சி அதிகாரிகளுடன் நடை பயிற்சி மேற்கொண்டு ஆய்வு செய்தார்.
அப்போது அதிகாரிகளுக்கு முக்கிய ஆலோசனைகளையும் அவர் வழங்கினார். முன்னதாக மெரினா கடற்கரையை ஆக்கிரமித்து மீன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.