"மெரினாவை சுத்தப்படுத்துங்கள்" உயர்நீதிமன்றம் உத்தரவு…!!
வடபழனி சிவன் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 2017 மே 8ம் தேதி மின் கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மீனாட்சி, சந்தியா உள்ளிட்ட 4 பேர் உடல் கருகி பலியாகினர். 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்திய தமிழக அரசு அந்த கட்டிடத்திற்கு சீல் வைக்க உத்தரவிட்டது.இதுதொடர்பாக ட்ராபிக் ராமசாமி ஏற்கனவே வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது பலியானோர் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட இழப்பீடு போதுமானதாக இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதுமட்டுமில்லாமல் கட்டட விபத்து தொடர்பாக உரிமையாளர் விஜயகுமார் மீது ஏன் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்று கூறிய நீதிபதிகள் சென்னை மாநகராட்சி ஆணையர்களிடம் மெரினாவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி குப்பைகள் தூய்மைப்படுத்துங்கள் என்று சென்னை ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
அப்போது நீதிபதிகள் கூறும் பொது முதலில் மெரினாவை தூய்மையாக வையுங்கள் அதன்பிறகு சென்னை , மாவட்டம் என மாநிலத்தை தூய்மையாக வைப்போம்.தூய்மையான மெரீனாவாக 2019ஆம் ஆண்டை கொண்டடுக்குவோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.இந்த வழக்கை ஜனவரி 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
DINASUVADU.COM