மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது..!சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!!
மெரினா கடற்கரையில் எந்தவித போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் அனுமதிக்க முடியாது தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவிரி பிரச்னையில் அய்யாகண்ணுவிற்கு அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்றம்.
தனி நீதிபதி கடந்த ஏப்ரல் மாதத்தில், மெரினாவில் ஒருநாள் போராட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தார்.மேலும் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, காவல்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்நிலையில் தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்று வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் மெரினாவில் எவ்வித போராட்டத்தையும் அனுமதி முடியாது என உத்தரவு பிறபித்துள்ளது.
DINASUVADU