மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்: கொடியசைத்து தொடங்கி வைத்தார் -முதல்வர்..!!
சென்னை விமான நிலையம் வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவையை வண்டலூர் வரை நீட்டிப்பது பற்றி ஆய்வு நடத்தப்படும் என முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கிமீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே, 28 கிமீ தூரம் பணிகள் முடிந்து மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக நேரு பூங்கா – எழும்பூர் – சென்ட்ரல் (2.7 கிமீ) மற்றும் சின்னமலை – டிஎம்எஸ் (4.5 கிமீ) வழித்தடத்தில் மெட்ரோ ரயில்சேவை தொடக்க விழா எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று நடந்தது.
பின்னர் புதியதாக அமைக்கப்பட்டுள்ள சென்ட்ரல், எழும்பூர் மற்றும் சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை, டிஎம்எஸ் ஆகிய 6 மெட்ரோ ரயில் நிலையங்களை முதல்வர் தொடங்கி வைத்தார். அதன்பிறகு, முதல்வரும் ஹர்தீப்சிங் புரியும் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அதன்பிறகு, அனைவரும் ரயிலில் பயணம் செய்தனர்.
இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குர் பங்கஜ்குமார் பன்சால் உட்பட பலரும் பங்கேற்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்