மூளைக்கட்டியை அலட்சியப்படுத்தினால் உயிருக்கே ஆபத்து!அரசு ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் கடும் எச்சரிக்கை
சென்னை ஸ்டேன்லி அரசு மருத்துவமனை முதல்வர் மருத்துவர் பொன்னம்பல நமச்சிவாயம்,மூளையில் ஏற்படும் கட்டிக்கான சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ளாவிட்டால் உயிருக்கே ஆபத்தாக முடியும் என எச்சரித்தார்.
மூளைக்கட்டிகளைப் பற்றியும் அதனால் ஏற்படும் பாதிப்புகள், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஜூன் 8ஆம் தேதி மூளைக்கட்டிகள் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ஸ்டான்லி மருத்துவமனையில் மூளைக்கட்டியினால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து கிமோதரப்பி, ரேடியோதரப்பி உள்ளிட்ட சிகிச்சைகள் மூலம் கட்டிகள் அகற்றப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவமனையின் தலைவர் பொன்னம்பல நமச்சிவாயம், கடந்த ஓராண்டில் மட்டும் இங்கு 157 நோயாளிகளுக்கு மூளைக் கட்டிக்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.