மூன்று நாளைக்குள் தில்லியிலிருந்து மறுமொழி வரவில்லை..! என்றால் நாமேஅவர்களை விடுதலை செய்வோம்..!!முன்னள் முதல்வர் சூளுரை…!!!
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை, இதையொட்டித் தமிழக முதல்வர் கடந்த 2014 பிப்ரவரி19ஆம் நாள் சட்டப் பேரவையில் ஓர் அறிவிப்புச் செய்தார்:ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப் பெற்றுக்கடந்த 23 ஆண்டுகளாகச் சிறையில் இருந்துவரும்பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய எழுவரையும்விடுதலை செய்வதென தமிழக அமைச்சரவை தீர்மானித்துள்ளது, உரிய சட்ட விதிகளின் படி இந்த முடிவுநடுவணரசுக்குத் தெரிவிக்கப்படும், மூன்று நாளைக்குள் தில்லியிலிருந்து மறுமொழி வரவில்லை என்றால் நாமேஅவர்களை விடுதலை செய்வோம் என்றார் முதல்வர்.இந்திய அரசு தமிழக அரசுக்கு எவ்வித மறுமொழியும்அனுப்பாமல் தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. பிப்ரவரி 20ஆம்நாள் தமிழக அரசின் முடிவை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்து விட்டது.
இந்திய அரசு தொடுத்த வழக்கோடு தமிழ்நாட்டுக்காங்கிரசார் சிலரும் சேர்ந்து கொண்டு புதுப் புதுசிக்கல்களைக் கிளப்பினர்: தூக்குத் தண்டனையை ஆயுள்சிறைத் தண்டனையாகக் குறைத்த பின், மீண்டும் ஒருமுறை தண்டனைக் குறைப்பு வழங்க முடியுமா? குற்றநடைமுறைச் சட்டத்தின் 432 முதல் 435 வரையிலான விதிகளின்படி இப்படிச் செய்யமுடியும் என்றால் இந்தக் குற்ற நடைமுறைச்சட்ட விதிகளே செல்லாது என்று கூட சில காங்கிரசார்வாதிடுகின்றனர்! செத்தவர் ராஜிவ் என்பதால், இந்தவழக்கில் சட்டம் விதிமுறை என்பதெல்லாம்கூடஇவர்களுக்கு கெட்ட வார்த்தையாகி விடுகிறது.
அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 72 வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்திஇந்திய அரசோ, உறுப்பு 161 வழங்கும் அதிகாரத்தைப்பயன்படுத்தி மாநில அரசோ ஒரு முறை தண்டனைக்குறைப்பு வழங்கிய பின் குற்ற நடைமுறைச் சட்டவிதிகளைப் பயன்படுத்தி மாநில அரசு மீண்டும் ஒருமுறை தண்டனைக் குறைப்பு வழங்க முடியுமா? அதாவதுதூக்குத் தண்டனையை ஆயுள் சிறைத் தண்டனையாகக்குறைத்த பின், ஆயுள் முழுக்க சிறையில் அடைத்துவைக்காமல் முன்-விடுதலை செய்ய இப்போதுள்ள சட்டவழிவகைகள் நீடிக்கலாமா கூடாதா? ஆயுள்தண்டனைக் கைதியை முன்-விடுதலை செய்வதற்கானவழிவகைகள் ஒருசில வழக்குகளில் மட்டும்பொருந்தாதபடி செய்யலாமா? அதாவது என்ன நடந்தாலும் அந்த ஆயுள் கைதிகளை சாகும் வரை சிறையில்அடைத்து வைக்கலாமா? கொலை செய்ததாகத்தண்டிக்கப்பட்டவருக்கு கொலையுண்டவரின்குடும்பத்தினர் தரப்புக் கருத்தைக் கேட்காமலேதண்டனை குறைப்பு வழங்கலாமா?
இந்த வினாக்கள் அனைத்தும் ஏதோ ஒரு ராஜிவ்கொலை வழக்குத் தொடர்பானவை மட்டுமல்ல, சிறைப்பட்டுள்ள கைதிகள் அனைவரின் மனிதஉரிமைகள் தொடர்பானவை, சிறைத் தண்டனையின்நோக்கங்கள் தொடர்பானவை, மாநில அரசுக்குள்ளஅதிகாரங்கள் தொடர்பானவை. ஆனால், இந்தவினாக்களுக்கு இதுவரை விடை காணப்படவில்லைஎன்று நினைக்க வேண்டாம். இப்போதுள்ளசட்டங்களிலேயே போதிய விளக்கங்கள், விடைகள்உள்ளன. போதவில்லை என்றால் சிறை தொடர்பானஉச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளன. குறிப்பிடத்தக்கஒன்று கிருஷ்ணய்யர் தலைமையிலான நீதிபதிகள் ஆயம்1980ஆம் ஆண்டு மாருராம் வழக்கில் வழங்கிய தீர்ப்பு.
இந்தப் பூசலின் மையம்… குற்ற நடைமுறைச்சட்டத்தின் 432 முதல் 435 வரையிலான விதிகளின்படிமாநில அரசுக்குள்ள தண்டனைக் கழிவு மற்றும்தண்டனைக் குறைப்பு அதிகாரங்களே. குறிப்பாகச்சொன்னால் பிரிவு 435 மாநில அரசுக்கு விதிக்கும்கட்டுப்பாடுகளை எப்படிப் புரிந்து கொள்வது என்பதே.
குறிப்பிட்ட சில வழக்குகளில் மாநில அரசுநடுவணரசைக் கலந்து கொண்ட பிறகே செயல்படவேண்டும் என்று இந்தப் பிரிவு 435 சொல்கிறது. இதன்இரு உட்பிரிவுகள் இருவகையான வழக்குகளைக்குறிப்பிடுகின்றன. முதல் உட் பிரிவு 435(1) மூன்றுகூறுகளைக் கொண்டது. இவற்றுள் முதல் கூறுதான்(435(1)(அ). இங்கு நம் கருத்துக்குரியது. தண்டனைக் கழிவு அல்லது தண்டனைக் குறைப்பு வழங்குவதற்கு 432, 433 ஆகிய பிரிவுகள்வழங்கும் அதிகாரத்தை மாநில அரசு – மத்திய புலனாய்வு நிறுவனம், புலனாய்வுசெய்த வழக்கில் பயன்படுத்தும்போது, நடுவண் அரசிடம் கலந்தாய்வு செய்யவேண்டும் என்று இந்த பிரிவு கூறுகிறது.
ராஜிவ் கொலை வழக்கை நடுவண் புலனாய்வு நிறுவனம் (ஊBஐ) புலனாய்வுசெய்தது உண்மை. எனவே, எழுவர் விடுதலைக்கு இவ்விதி பொருந்தும் இதில்அய்யமில்லை. அதனால்தான் தமிழக முதல்வர் அவர்களை விடுதலை செய்யும்முடிவை உடனே செயல்படுத்தாமல் இந்திய அரசுக்குத் தெரியப்படுத்தினார்.முதல்வர் மூன்று நாள் கெடு விதிக்கலாமா? என்று கேட்பவர்களுண்டு. விதித்தால்என்ன? மூன்று நாள் போதாது என்று நடுவணரசு கருதியிருந்தால் மாநில அரசுக்குத்தெரிவித்துக் கூடுதல் அவகாசம் பெற்றிருக்கலாமே! செய்தி தெரிவிப்பதை மட்டுமேகலந்தாய்வாக மதிக்க இயலாது என்றால், திறமான கலந்தாய்வு எப்படி இருக்கவேண்டும் என்பதை நடுவணரசே எடுத்துரைக்கலாமே! மாநில அரசு எழுதும்மடல்களைக் குப்பைத் தொட்டியில் வீசி விட்டு மறுமொழியே இல்லாமல்காலங்கடத்துவதற்குப் பெயர்தான் திறமான கலந்தாய்வோ?
எழுவர் விடுதலை தொடர்பில் முதல்வர் செயலலிதா செய்தது சட்டப்படியும்ஞாயப்படியும் சரி. கலந்தாய்வு என்ற கட்டுப்பாட்டைக் காரணங்காட்டி இந்தியஅரசின் இசைவு பெற்ற பிறகே விடுதலை செய்ய முடியும் என்று காங்கிரஸ்சொல்வது விபரீத அபத்தம்! கலந்தாய்வு (Consultation) வேறு, ஒப்புதல் (Concurrence)வேறு இதைத் தெரிந்து கொள்ளப் பெரிய சட்ட அறிவு ஏதும் தேவை இல்லை.எளிய ஆங்கில-தமிழ் அகராதியே போதும். இது வருகிற சூலை 15ஆம் நாள் உச்சநீதிமன்றத்தில் தெளிந்துரைக்கப்படும் என்று நம்புகிறோம்.
கலந்தாய்வு வேறு, ஒப்புதல் வேறு என்பதற்கு குறிப்பிட்ட சட்டப் பிரிவிலேயேஅகச் சான்று உள்ளது. பிரிவு 432, உட்பிரிவு (2) இந்த வேறுபாட்டைத் தெளிவாகஉணர்த்துகிறது. எவ்வாறான வழக்குகளில் மாநில அரசின் தண்டனைக் குறைப்புஆணை மத்திய அரசின் தண்டனைக் குறைப்பு ஆணை இல்லாமல் நடைமுறைக்குவராது என்று இந்த உட்பிரிவு தெளிவுபடுத்துகிறது. அதாவது நடுவணரசின்ஆட்சியதிகாரத்துக்குட்பட்ட வழக்குகளில் மாநில அரசு மட்டும் தண்டனைக்குறைப்பு வழங்கினால் போதாது, மத்திய அரசும் வழங்கினால்தான் அதுசெயல்வடிவம் பெறும்;அதாவது மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் மாநில அரசுதண்டனைக் குறைப்புச் செய்ய முடியாது.
கலந்தாய்வு என்றாலே ஒப்புதல்தான் என்றால் இந்த இருவேறு உட்பிரிவுகளேதேவைப்பட்டிருக்க மாட்டா. இரண்டும் சேர்ந்து ஒரே பிரிவாக இருந்திருக்கும்.
முதல் உட்பிரிவு கலந்தாய்வு கோருகிறது, இரண்டாம் உட்பிரிவு ஒப்புதல்கோருகிறது. அதாவது மத்தியக் காவல்துறை நிறுவனம் (சி.பி.அய்.) தொடர்ந்தவழக்கில் மத்திய அரசுடன் கலந்தாய்வு தேவை. மத்திய அரசின் அதிகாரத்துக்குட்பட்ட குற்றங்களில் மத்திய அரசின் ஒப்புதல் தேவை. ராசீவ் கொலை வழக்கு முதல்வகையைச் சேர்ந்தது என்பதால், கலந்தாய்வே போதுமானது. இது முதல்வகையைச் சேர்ந்தது என்பதை இந்திய அரசோ காங்கிரசோ மறுக்கவில்லை.ஆனால் கலந்தாய்வு என்றாலும், இந்திய அரசின் ஒப்புதல் பெற்ற பிறகே விடுதலைசெய்ய முடியும் என்று பேசுகிறார்கள்.
முதல் உட்பிரிவு கலந்தாய்வு கோருகிறது, இரண்டாம் உட்பிரிவு ஒத்த முடிவு, அதாவது ஒப்புதல் கோருகிறது. இந்த வேறுபாட்டைக் காண விடாமல் சிலர் தடுப்பது ஏன்?. மனித உரிமைகள், மாநில உரிமைகள், நீதிமன்றத் தீர்ப்புகள், சட்ட விதிகள் எல்லா வற்றையும்தங்களின் பழிவெறி ஆதாய அரசியல் யாகத் தீயில் போட்டுக் கொளுத் தும்அவர்களின் முயற்சிக்கு அரசுகளோ உச்ச நீதிமன்றமோ துணை போகாதிருக்கவேண்டும். மனித உரிமைகள் மகத்தானவை, எந்தப் பெரிய மனிதனை விடவும்!
DINASUVADU