சென்னை அருகே 3 கோவில்களில் இருந்து 80 கோடி ரூபாய் மதிப்பிலான 8 சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில் மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் ராமானுஜபுரம் கிராமம் மணிகண்டேஷ்வரர் கோவிலில் இருந்து 2015ம் ஆண்டு சிவன் பார்வதி உலோக சிலைகள் களவு போனது. இதே போன்று திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சவுந்திரியபுரம் ஆதிகேசவபெருமாள் கோவிலில் இருந்து ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரின் சிலைகள் கடத்தப்பட்டன.
வந்தவாசி அருகே உள்ள பையூரில் அமைந்துள்ள பிரசன்ன வெங்கடேஷபெருமாள் ஆலயத்தில் இருந்தும் 2015ம் ஆண்டு பிரசன்ன வெங்கடேஷ பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி, சக்கரத்தாழ்வார் ஆகியோரின் சிலைகள் களவாடப்பட்டன. இந்த எட்டு சிலைகளையும் கடந்த 2015ம் ஆண்டு மே 14ந் தேதி விற்பனை செய்வதற்காக இரு சக்கர வாகனத்தில் தனலிங்கம் என்பவர் சென்னை மேற்குமாம்பலம் சி.எஸ்.ஐ சர்ச் அருகே சென்று கொண்டிருந்த போது ஆட்டோவில் துரத்திச் சென்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் மற்றும் உதவி ஆய்வாளர் ஜூலியஸ் சீசர் ஆகியோர் மடக்கினர்.
மேலும் 80 கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் முதல் குற்றவாளியான காவாங்கரை ஜெயக்குமாரை போலீசார் மூன்று ஆண்டுகளாக தேடி வந்தனர். 2015ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து வரும் ஜெயக்குமார் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து அந்த ஜெயக்குமார் சென்னை அருகே செங்குன்றத்தில் பதுங்கியிருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தன. இதன் அடிப்படையில் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் அங்கு சென்று ஜெயக்குமாரை கைது செய்தனர். ஜெயக்குமார் குறித்து தகவல் அளித்தவர்களுக்கு பொன்.மாணிக்கவேல் தனது சொந்த பணத்தை வெகுமதியாக பணம் கொடுத்து பாராட்டினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் பட்டாசு ஆலை வெடி வெடி விபத்தில் 6…
நியூ யார்க் : அமெரிக்காவில் அண்மையில் தேர்தல் முடிந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார்.…
சென்னை : வரும் ஜனவரி 10-ஆம் தேதி சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும், வரும் நாட்களில் வானிலை எப்படி…
சிட்னி : ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3 சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில்…
ஸ்ரீஹரிகோட்டா : கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி ஆந்திர பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி…
சென்னை : அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று…