மூச்சுத்திணறல் காரணமாக மூத்த தலைவர் மருத்துவமனையில் அனுமதி…!
மீண்டும் மூச்சுத்திணறல் காரணமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை 28 ஆம் தேதி ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மூச்சு திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டார்.பின்னர் அவரை பல்வேறு முக்கிய தலைவர்களும் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.பின்னர் அவர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.
இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் தா.பாண்டியனுக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து,ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
DINASUVADU