மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு தொடங்கியது…!
அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூடியது.
கடந்த 7 ஆம் தேதி தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி காலமானார்.பின்னர் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பின் திமுக தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோர் ஆகஸ்ட் 26ம் தேதி(அதாவது நேற்று முன்தினம் ) வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.
அதேபோல் நேற்று முன்தினம் நடைபெற்ற வேட்பு மனு தாக்கலில் செயல் தலைவராக இருந்த மு.க ஸ்டாலின் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
பின் இன்று நடைபெறும் தி.மு.க பொதுக்குழுவில் கூடி மனுவை ஆய்வு செய்து தலைவராக மு.க ஸ்டாலின் அறிவிக்கப்படுகிறார்.
இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூடியது.திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின், பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
DINASUVADU