மு.க.ஸ்டாலின், காவிரி பிரச்சினை தொடர்பாக, தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்திட நேரம் ஒதுக்கித் தருமாறு, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த 3 மாத காலம் அவகாசம் கேட்டு மத்திய அரசு தாக்கல் செய்த “விளக்க மனு” அநீதியானது என்பதால் தமிழ்நாட்டு மக்கள் கொந்தளிப்பிற்கு உள்ளானதாகக் கூறியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் தமிழ்நாட்டில் தன்னெழுச்சியாக புறப்பட்டிருக்கும் மக்களின் உணர்வுகளை நேரடியாக தெரிவிப்பதற்காக அனைத்துக் கட்சி தலைவர்களுடன் சந்திக்க தாம் நேரம் கேட்பதாக மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள “விளக்கம் கேட்கும்” மனுவை திரும்பப் பெறுமாறு மத்திய நீர் வளத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறும், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிடுமாறும் பிரதமரை அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…