மு.க.ஸ்டாலினை கலாய்த்த H.ராஜா அவர் அட்மின் போட்ருப்பாரோ !
ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தனிப்பட்ட முறையில் கொண்டு வர தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்தது. அதேசமயம், காங்கிரஸ் கட்சியும் தனிப்பட்ட முறையில், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்திருந்தது.அதை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். அதன்படி மக்களவையில் நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதம் நடந்த பின்னர் குரல் வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவிக்கையில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தமிழக அரசு ஆதரவு தெரிவிக்கவேண்டும் என்றும் திமுக வெளியிலிருந்து ஆதரவு தெரிவிக்கும் என்று தெரிவித்தார்.இதனிடையில் தமிழக முதலமைச்சர் காவேரி பிரச்னைக்காக நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்கியபொழுது மற்ற மாநில எம்பிக்கள் தங்கள் மாநில நலனை மட்டும் கருதுகின்றனர். அவர்கள் தமிழகத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை ,என்று சூசகமாக தெரிவித்தார் .
இதனிடையில் H.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் பதிவு செய்துள்ளார் அதில் அவர் மு.க.ஸ்டாலினை கேலி செய்யும் விதமாக ஸ்டாலின் கூறிய வெளியிலிருந்து ஆதரவு தெரிவிப்பதை ,திமுக வெளியிலிருந்து (OUTSIDE ) ஆதரவாம் என்று தெரிவித்துள்ளார் .
Dinasuvadu.com
மக்களவையில் எதிர் கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு திமுக வெளியிலிருந்து (outside) ஆதரவாம்
— H Raja ( மோடியின் குடும்பம்) (@HRajaBJP) July 19, 2018