தமிழக பாஜக தலைவர் தமிழிசை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார்.
தூத்துக்குடிக்கு விமானத்தில் வருகை தந்த தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசையை விமானத்தில் வைத்து அவருக்கு எதிராக பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று கோஷமிட்டார் சோபியா என்ற பெண்மணி எனவே சோபியா மீது நடவடிக்கை எடுக்க கோரி விமான நிலைய போலீசாரிடம் பாஜக தலைவர் தமிழிசைசவுந்தராஜன் மனு அளித்தார்.இதனையடுத்து, சோபியாவை கைது செய்த போலீசார், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். விசாரித்த தூத்துக்குடி நீதிமன்றம் தமிழிசை முன் முழக்கமிட்ட சோபியாவுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் என்று உத்தரவு பிறப்பித்தது.
பின் விமானத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக முழக்கமிட்ட பெண் சோபியா மீது ஜாமினில் வரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.மேலும் இவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கைதான சோபியாவின் ஜாமின் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.பின்னர் மாணவி சோபியாவுக்கு ஜாமீன் வழங்கியது தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.நிபந்தனைகள் எதுவும் விதிக்காமல் ஜாமின் வழங்கியது. மேலும் சோபியாவுக்கு அவரது பெற்றோர்கள் அறிவுரை வழங்கும் படியும் நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.பின்னர் கைதான மாணவி சோபியா ஜாமீனில் விடுதலையானார்.
இந்நிலையில் சோபியாவின் கைதை கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்தார்.அவர் கூறுகையில்,ஜனநாயக விரோத கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும். அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்? நானும் சொல்கின்றேன்.பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக என்று கூறினார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக.,வை சேர்ந்த நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் மூலமாக கருத்து தெரிவித்தார்.
அதில் பதிவிட்ட்து ,ஸ்டாலினுக்கு துணிவிருந்தால்’பாசிச பாஜக அரசு ஒழிக’ என்று,பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் லண்டனுக்கு செல்லும் போது கோஷமிடுவாரா என்று கேள்வி எழுப்பினார்.
இவரது இந்த பதிவிற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை பதில் கருத்து ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் சபாஷ் சரியான கேள்வி! தெம்பு திராணியிருந்தால்????பேச்சுரிமை காட்டட்டுமே? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார்.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…